பிரியா விடைபெறபோகும் இந்தியர்களின் செல்ல பிள்ளை மாருதி ஆம்னி!!

இந்தியர்களின் செல்லபிள்ளை போல எந்த வேலையும் செய்யகூடி வாகனங்களில் ஒன்று மாருதி ஆம்னி. பள்ளி குழந்தைகளை ஸ்கூலுக்கு கூட்டிபோவதாகட்டும், சின்ன பேமிலி டூர், மினி லோடு என எல்லா இடத்திலும் இறங்கி அடிக்கும் கில்லி  மாருதி ஆம்னி.
1983ஆம் ஆண்டு இந்த மாருதி 800 கார் அறிமுகம் ஆனது, அதனை தொடர்ந்து ஓர் ஆண்டு கழித்து அதாவது 1984ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் ஆம்னி காரை செய்தது. அறிமுகம் செய்யும்போதே மல்டி பர்பஸ்காக உருவாக்கப்பட்டது. இந்த வகை கார் அறிமுகம் செய்யப்பட்டு சரியாக 34 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த காரில் 800சிசி என்ஜின் பயன்படுத்தப்படுகிறது .இன்று வரை அந்த கார்ல் இந்த எஞ்சினை மாற்றவில்லை. மேற்புற டிசைன் எத்தனை முறை மாற்றினாலும் உட்புற எஞ்சினில் மாறுபாடு இல்லை.
இந்த செய்தியை படிக்கும் போதே மாருதி சுசுகி நிறுவனம் ஆம்னி வகை காரை உற்பத்தி செய்வதை நிறுத்த போகிறது என நினைக்காதீர்கள்.
அதாவது 2020 ஆம் ஆண்டு முதல் மோட்டார் வாகன உற்பத்தி சட்டத்தில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவர உள்ளன. அந்த கட்டுப்பாட்டிற்குள் இந்த மாருதி ஆம்னி வகை கார் அமையாது என்பதால் இந்த வகை காரை உற்பத்தி செய்வதை நிறுத்த மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment