தொடரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்.! முதற்கட்டமாக 1400 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் ஓலா.!

ஊரடங்கால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் ஓலா நிறுவனம் முதற்கட்டமாக தங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய  உள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் பொது போக்குவரத்துகள், கால் டாக்சி போன்ற சேவைகள் துவங்கப்படாமல் இருந்து வருகின்றன. கால் டாக்ஸி சேவையில் உலக அளவில் முக்கியமாக இருக்கும் ஓலா நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்நிறுவனம் முதற்கட்டமாக தங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 1,400 பேரை பணிநீக்கம் செய்ய  உள்ளது என அந்நிறுவன மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஊடங்கால் ஓலா நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை பெங்களூருவில் எடுக்கப்பட உள்ளதாம்.

பணிநீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கு அறிவிப்பு காலத்திற்கான 3 மாத சம்பளம் வழங்கப்படும் எனவும், பணிநீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு, பெற்றோர்களுக்கான விபத்து காப்பீடு (குறிப்பிட்ட தொகை வரையில்) உள்ளிட்டவை டிசம்பர் 31 வரையில் கிடைக்கப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.