பிறந்து 6 மாதம் ஆகிய குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சத்தான உணவுகள்

பெற்றோர்கள் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை

By Priya | Published: Apr 09, 2019 08:10 AM

பெற்றோர்கள் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுடைய தேவைகளை மிகவும் கவனமாக பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள். இவ்வாறு பெற்றோர்களின் கவனிப்பில் இருக்கும் அநேக குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டால் பாதிக்கபடுகிறார்கள். மருத்துவர்கள் 6 மாதம் வரைக்கும் குழந்தைகளுக்கு திடஉணவுகள் கொடுக்க கூடாது. அதனால் சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்த வகையான உணவுகளை கொடுப்பது என குழப்பமடைகின்றனர். இந்த பதிப்பில் 4-6 மாதங்களுக்கு பிறகு குழந்தைகளுக்கு எந்த வகையான திட உணவுகளை கொடுக்கலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தாய்ப்பால் :

  ஊட்ட சத்து குறைபாட்டிற்கு முக்கிய காரணம் தாய்ப்பால் குழந்தைகளுக்கு கிடைக்காதது தான். பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும். சில பெற்றோர்கள் தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்து விடுமோ  நினைத்து சில குழந்தைகளுக்கு சில  அம்மாக்கள் தாய்ப்பால் கொடுக்காமல் விட்டு விடுவார்கள்.அவ்வாறு செய்வது மிகவும்  தவறு.

சாதம் :

  குழந்தைகளுக்கு எளிதில் செரிக்க கூடிய உணவு வகைகளை அவர்களுக்கு 4 மாதத்தில் இருந்து கொடுப்பது மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு 3 மாதங்களில் இருந்து சாதத்தை நன்கு மசித்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 1 ஸ்பூன் அளவு சாதம் கொடுக்காலம்.

காய்கறிகள் :

குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடுகளை சரி செய்வதில்  காய்கறிகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. கேரட் மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மிகவும் நல்லது. 4 மாதங்களில் இருந்து குழந்தைகளுக்கு காய்கறிகளை கொடுத்து வந்தால் அது வைட்டமின் சத்துக்களையும் மற்றும் பல இரும்பு சத்துக்களையும் கொடுக்கிறது. காய்கறிகளை எப்போதும்  வேக வைத்து கொடுக்க வேண்டும்.காய்கறிகளை நாம் வேக வைக்காமல் கொடுப்பதால் அவை குழந்தைகளின் தொண்டையில் சிக்கி விடும்.

பழங்கள்:

குழந்தைகளுக்கு வாழை பழம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழக்கலாம். அவகோடா போன்ற பழங்களை வேக வைக்காமல் கொடுக்கலாம். 6 மாதத்தில் இருந்து பழங்களை கொடுக்க ஆரம்பிக்கலாம்.

பால் :

பாலை ஆடைகளை நீக்காமல் அப்படியே கொடுப்பது மிகவும் நல்லது. பாலில் அதிக அளவு புரத சத்து மிகுந்து காணப்படுகிறது.எனவே குழந்தைகளுக்கு சுத்தமான பசும் பாலை கொடுப்பது மிகவும் நல்லது.

வேகாத உணவுகள் :

  இறைச்சி மற்றும் மீன் முதலிய உணவுகளை கொடுக்க கூடாது. இது குழந்தைகளுக்கு  செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுத்தலாம்.

தானியங்கள்:

குழந்தைகளுக்கு ஓட்ஸ் மிக சிறந்த உணவாகும்.தானியங்களில் சிறிதளவு தாய்ப்பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது அவர்களின் உடலுக்கு மிகவும் நல்லது.  
Step2: Place in ads Display sections

unicc