புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் ! அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி

அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள  இடைத்தேர்தல் தொகுதிக்கான தேதியை  அறிவித்தது தேர்தல் ஆணையம்.அதன்படி புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் அக்டோபர் 21- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் -துணை  ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , ரங்கசாமி முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.