நீட் நுழைவுத் தேர்விற்கான தேதி அறிவிப்பு.!

நீட் நுழைவுத் தேர்விற்கான தேதி அறிவிப்பு.!

வரும் ஜூலை 26-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான  NEET தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார்.

இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள் அனைத்து மூடப்பட்டது.  ஊரடங்கு தொடந்து நீடிக்கப்பட்டு கொண்டே செல்வதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சில நுழைவு தேர்வுகளும்  ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் தேர்வுகள் நடைபெறுமா..? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், மே மாதம்  மருத்துவ படிப்புகளுக்கான NEET  நுழைவுத்தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு  குறித்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். அதில், வரும் ஜூலை 26-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான  NEET தேர்வு நடைபெறும் என அறிவித்தார். மேலும்  JEE முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும்  என அறிவித்தார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube