பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நோட்டாவில் கைவைக்கும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா இந்த பெயரை தெரியாத தென்னிந்திய  சினிமா ரசிகர்கள் கிடையாது என சொல்லும் அளவிற்க்கு அர்ஜூன் ரெட்டி எனும் ஒற்றை படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.

அதற்கு சான்று தற்போது அவர் தெலுங்கு மொழியில் நடித்த கீதா கோவிந்தம் படம் சென்னையில் மட்டுமே ஒரு கோடியை தாண்டி வசூலை குவித்து வருகிறது.

தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகி வரும் நோட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் ஆகிய ஹிட் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

இதன் ட்ரெய்லர் செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 4மணிக்கு வெளியாக உள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ், நாசர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment