பேருந்தில் நின்றுகொண்டு பயணம்.! காற்றில் பறக்கும் சமூக இடைவெளி.!

திருச்செந்தூர் – திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் பயணிகள் வழக்கம் போல அனைத்து இருக்கைகளிலும் அனைவரும் அமர்ந்தும், மேலும், பலர் நின்றுகொண்டும் பயணித்து வருகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த 5 கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் விடப்பட்டிருந்தன. அதில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் 50 சதவீத பேருந்து இயக்கப்பட்டது

திருநெல்வேலியில் இருந்தும் தினமும், தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, நாகர்கோவிலுக்கு 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி புறப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக ( 50 சதவீதம்) உள்ளதால் தற்போது பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. 

முதல் நாளில் பின்பற்றப்பட்ட சமூக இடைவெளியானது, 2,3 ஆம் நாட்களில் காற்றில் பறக்கவிடப்பட்டது. இதனால், வழக்கம் போல அனைத்து இருக்கைகளிலும் அனைவரும் அமர்ந்தும், மேலும், பலர் நின்றுகொண்டும் பயணித்து வருகின்றனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது. இதனை அதிகார்கள் கண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் விருப்பம்.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.