ஜனவரி 5 ஆம் தேதி வரை வடகிழக்கு மழை தொடரும்

ஜனவரி 5 ஆம் தேதி வரை வடகிழக்கு மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

By venu | Published: Jan 01, 2020 01:10 PM

  • ஜனவரி 5 ஆம் தேதி வரை வடகிழக்கு மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • சென்னையை பொறுத்தவரையில் இடைவேளிவிட்டு ஒரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,வளிமண்டலத்தின் கீழ்பகுதியில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கின்ற பகுதியானது தமிழகப் பகுதிகளில் நிலவுகிறது. அடுத்து வரும் 2 தினங்களை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஜனவரி 5 ஆம் தேதி வரை வடகிழக்கு மழை தொடரும்.சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இடைவேளிவிட்டு ஒரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 3 அல்லது 4 நாட்களுக்கு மழை சென்னையில் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc