அதிமுகவை சேர்ந்த யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள்-அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவை சேர்ந்த யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள் என்று மீன்வளத்துறை

By venu | Published: Sep 04, 2019 08:30 AM

அதிமுகவை சேர்ந்த யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  அதிமுக மிகப்பெரிய இயக்கம். எம்.ஜி.ஆர் திமுகவை எதிர்த்து தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். மேலும் திமுக ஒரு தீயசக்தி என்று காட்டினார். அதுமட்டுமின்றி அதிமுகவை சேர்ந்த யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள். 

முதல்வர் லண்டனில் நிறைய நிறுவனங்களை சந்தித்து உள்ளார். இதன் மூலம் தமிழகத்திற்கு நல்ல முதலீட்டோடு வருவார். எதிர்க்கட்சிகளுக்கு நல்ல பதிலடி கொடுப்பார் முதல்வர்.

சினிமா டிக்கெட்டுகள் விற்பனையில் தனியார் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் . புதிதாக முளைத்த மழைக்காளான் தமிழச்சி தங்கபாண்டியன். அவர் பிரபலமடைய என்னை விமர்சனம் செய்கிறார் என்று  அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்தார். 

Step2: Place in ads Display sections

unicc