என்னை யாரும் நீக்க முடியாது,அமமுக என்னுடையது-புகழேந்தி அதிரடி

அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம்  அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் புகழேந்தி விளக்கம் அளித்தார்.வீடியோவில் நான் கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்து தான் விவாதித்தேன் என்று தெரிவித்தார்.ஆனால் என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்தார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக  அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செகூறுகையில்,,எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்.புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை.எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து சொந்த விருப்பத்தின் பெயரில் நிர்வாகிகள் செல்கின்றனர்.அதனை துரோகம் என்று சொல்ல மாட்டேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று அமமுக  கட்சியின் சார்பாக வெளியான செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.ஆனால் அதில் புகழேந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனால் மீண்டும் அமமுக  வட்டாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து புகழேந்தி கூறுகையில், அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது. கட்சியே என்னுடையது.அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன், யாரையும் நம்பி நான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.