கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.கட்சி பணிகள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube