நாளை நடைபெறும்  நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை-அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திட்டவட்டம்

நாளை நடைபெறும்  நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை-அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திட்டவட்டம்

கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற  ஜனதா தள 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது .இந்த வழக்கை  இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. .ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாளை நடைபெறும்  நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை .உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.நாங்கள் 15 பேரும் ஒற்றுமையுடன், எங்களது முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

Join our channel google news Youtube