தமிழ் இனத்தின் துரோகியாக விஜய் சேதுபதியை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!

நடிகர் விஜய் சேதுபதி பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எம்.குமரன்

By Rebekal | Published: Jul 30, 2019 07:00 PM

நடிகர் விஜய் சேதுபதி பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எம்.குமரன் தா/பெ மகாலக்ஷ்மி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால், தற்போது "நானும் ரௌடி தான்", 'சேதுபதி", "றெக்கை" "இறைவி", "தர்மதுரை", "விக்ரம் வேதா" மற்றும் "கருப்பன்" போன்ற பல வெற்றி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தையும்,  தனக்கு சவாலான பல கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துள்ளார் இவர். இந்நிலையில், இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் நடிக்கிறார், எனும் அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராகிய வன்னி அரசு கூறியிருப்பது: நடிகர் விஜய் சேதுபதி, முத்தையாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த பண்பாடும், சமூக அக்கறையும் கொண்டுள்ள விஜய் சேதுபதி, தமிழினத்தின் துரோகியாகிய முத்தையா முரளிதரனின் வேடத்தில் நடிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இலங்கை தமிழர்களை கொன்று குவித்து, ஈன படுகொலை செய்த ராஜ பக்சேவை வாழ்த்தி, "அமைதியை நிலை நிறுத்திய ராஜபக்சே" எனும் கருத்து கூறியவர் இவர்.   மேலும் சிங்களவர்களால் மிகவும் பாதிப்புக்குளாகிய தமிழ் மக்களை விசாரிக்க தவறி, போர் தொடுத்த சிங்கள மக்களின் வீடுகளுக்கு சென்று ஆதரவு கூறியவர். இப்படிப்பட்ட தமிழினத்தின் துரோகியும் ராஜபக்சேவின் அடிமையுமாகிய முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி நடிப்பதை நான் மட்டும் அல்ல எந்த ஒரு ஈழ தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என தனது குமுறலை கொட்டியுள்ளார் வன்னி அரசு.  
Step2: Place in ads Display sections

unicc