யாருக்கும் அதிமுக நாங்கள் இணைவதில் விருப்பம் இல்லை- ஜெ தீபா

  • ஜெ.தீபா,  தனியாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார்.
  • அதிமுகவில் சேர்வதற்கு சில மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா,  தனியாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியை ஆரம்பித்தார்.  இந்த இயக்கம் கடைசியாக நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என அறிவித்தார். அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் எம்ஜிஆர் அம்மா தீபா  அமைப்பை கலைப்பதாகவும், அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார்.ஆனால் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில் தி நகரில் உள்ள தனது இல்லத்தில் ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் யாருக்கும் அதிமுக நாங்கள் இணைவதில் விருப்பம் இல்லை.அதிமுகவுடன் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்த பின்னரும் அதிகமுவில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்போ, இணைப்பு நிகழ்ச்சியோ நடைபெறவில்லை. அதிமுகவில் சேர்வதற்கு சில மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.

எங்களை தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை. கட்சியில் எனக்கு கொள்கை பரப்பு செயலாளராக பதவி வழங்கப்படும் என எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் எங்கள் தொண்டர்கள் சென்ற போது அங்கு உரிய மரியாதை இல்லை.எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உடன் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.