ஒருவரை விமர்சித்து விளம்பரம் தேட அவசியமில்லை-விஜய் குறித்து அமைச்சர் கருத்து

ஒருவரை விமர்சித்து விளம்பரம் தேட அவசியமில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 

By Fahad | Published: Apr 05 2020 12:27 AM

ஒருவரை விமர்சித்து விளம்பரம் தேட அவசியமில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  தெரிவித்துள்ளார். சென்னையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,  யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.மேலும் சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுநர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ, அதைச் செய்யாமல் லாரி ஓட்டுநர் மீது பழிபோடுகிறார்கள் என்று பேசினார். இதற்கு அதிமுகவினர்கள் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஆடியோ வெளியீட்டில் திரைப்படத்தை பற்றி பேசலாம்.ஒருவரை விமர்சித்து விளம்பரம் தேட அவசியமில்லை. பிறரை விமர்சிக்கும் முன்பு தங்களின் நிலையை நடிகர்கள் உணர்ந்து கொள்வது நல்லது என்று தெரிவித்துள்ளார்.