இனி அயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனு இல்லை..! சன்னி வக்பு வாரியம்..!

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்தது.
மேலும் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட அவர்கள் கேட்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும் ,உத்தரப்பிரதேச மாநில அரசும் ஒதுக்கி தர வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஏராளமானோர் வரவேற்றனர்.
அரசுகொடுக்கும் 5 ஏக்கர் நிலத்தை சிலர் ஏற்கக் கூடாது எனவும், சிலர் ஏற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம் என சன்னி மத்திய வக்பு வாரியத் தலைவர் ஜாபர் ஃபரூக்கி கூறினார்.
மேலும் வக்பு வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 26-ம் தேதி (அதாவது நேற்று ) நடைபெறவுள்ளது.அப்போது இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.அதன்படி நேற்று சன்னி மத்திய வக்பு வாரிய கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்ற  தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டாம் என பல உறுப்பினர்கள் கூறியதால் சீராய்வு மனுத்தாக்கல் செய்யவில்லை  என முடிவுஎடுக்கப்பட்டதாக கூறினார்.
கடந்த 17-ம் தேதி நடைபெற்ற முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் கூட்டத்தில்  உச்ச நிதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

author avatar
murugan