இன்னும் 2 மாதம் விவசாயிகள் யாரும் கடன்களை செலுத்த வேண்டாம்- கார்த்தி சிதம்பரம்

இன்னும் 2 மாதம் விவசாயிகள் யாரும் கடன்களை செலுத்த வேண்டாம்- கார்த்தி சிதம்பரம்

இன்னும் 2 மாதம் விவசாயிகள் யாரும் கடன்களை செலுத்த வேண்டாம் என்று  கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.திமுக சார்பாக அதன் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோர்  தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.அப்போது அவர் பேசுகையில்,இன்னும் 2 மாதம் விவசாயிகள் யாரும் கடன்களை செலுத்த வேண்டாம் .காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை அமல்படுத்தி குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை என்று  கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *