மருத்துவசிகிச்சை இல்லை! தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்ட குழந்தை!

பிறந்து 27 நாள்களே ஆன குழந்தை  தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவின் பிடியிலிருந்து  தப்பித்தது.

முதலில்  சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் நோயின் தீவிரம்  அதிகரித்து வருகிற நிலையில், இதற்கு உலக நாடுகள் முழுவதும், மருத்துவம் கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தி வருகிற நிலையில், இன்னும் மருந்து கண்டுபிடித்த பாடில்லை.

இந்நிலையில், தென்கொரியாவில் பிறந்து 27 நாட்களே ஆன நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 27 நாட்களே ஆன குழந்தைக்கு எவ்வாறு சிகிச்சை செய்வது என்று யோசித்து வந்த நிலையில், குழந்தைக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி எந்த சிகிச்சையும் இல்லாமல், 3 வாரங்களுக்கு குழந்தையின் தாய் தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்த வந்த நிலையில், மீண்டும் குழந்தையை பரிசோதித்த போது, நெகட்டிவ் என வந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், இந்த முறை குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்றது. மற்றவர்களுக்கு இந்த முறை , பொருந்தாது என்றும், பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தனித்தன்மை கொண்டது என மருத்துவர்கள்  கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.