எந்தளவு ஒத்துழைப்பு தருகிறார்களோ.. அதன்படிதான் தொற்றை குறைக்கமுடியும்- முதல்வர்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இந்நிலையில், கொரோனா குறித்து கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

காணொளி வாயிலாக உரையாற்றிய முதல்வர் பழனிச்சாமி தமிழகத்தில் ஒரு சொட்டு மழை நீரை வீணாகாமல் சேமிக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான படுக்கைகள் இருக்கின்றன.

சென்னையில் 50% பணியாளர்களை வைத்து தொழிற்சாலைகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநில தொழிலாளர்களை வைத்து தொழில் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம்களில் கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலே மிக அதிகமான பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது எனவும் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா தொற்றும், இறப்பு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் எந்தளவு ஒத்துழைப்பு தருகிறார்களோ, அதன்படிதான் தொற்றை குறைக்கமுடியும் என கூறினார்.

author avatar
murugan