இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் இல்லை- நித்யானந்த் ராய்.!

இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் இல்லை- நித்யானந்த் ராய்.!

கடந்த ஆறு மாதங்களில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து ஊடுருவல் வழக்குகள் அதிகரித்துள்ளன என்பது உண்மையா"  என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் இன்று  எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ள உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய்,  கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் "எந்த ஊடுருவலும்" பதிவாகவில்லை என்று கூறினார்.

மேலும், கடந்த 6 மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயற்சித்த வழக்குகளின் எண்ணிக்கை  பிப்ரவரி -0, மார்ச் -4, ஏப்ரல் -24, மே -8, ஜூன் -0, ஜூலை -1,  இவை தான் என்று  நித்யானந்த் ராய் கூறினார்.

நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில், லடாக்கில் சுமார் 38,000 சதுர கி.மீ பரப்பளவில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதில் கொங்கா லா, கோக்ரா மற்றும் பாங்காங் ஏரியின் வடக்குக் கரை ஆகியவை அடங்கும் என்று கூறியிருந்தார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை ஒப்பந்தத்தை சீனா மதிக்கவில்லை. அத்துடன் வரலாற்று பயன்பாடு மற்றும் நடைமுறை, இரு தரப்பினருக்கும் பல நூற்றாண்டுகளாக நன்கு அறியப்பட்டவை" என்று கூறினார்என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் - ஆந்திரா முதல்வர்!
இன்றைய முட்டை விலை...!
இந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!