எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை -அமைச்சர் கடம்பூர் ராஜு

சிறப்புக் காட்சியில் புகார்கள் எழுவதால் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி

By Fahad | Published: Apr 08 2020 11:16 AM

சிறப்புக் காட்சியில் புகார்கள் எழுவதால் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளகர்ளுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் விடுமுறையை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுவதால் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. தீபாவளி சிறப்பு காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தினை திருப்பிக்கொடுக்க வலியுறுத்தி உள்ளோம். பிகில் படம் மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Posts