அரசியலமைப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க மாட்டேன்-கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்

No decision will be taken against Constitution - Karnataka Speaker Ramesh Kumar

கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற  ஜனதா தள 15 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது . அதில்,ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக  தெரிவிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.மேலும்  எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது.ராஜினாமா கடிதம் வழங்கிய எம்எல்ஏக்களை நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம்  தெரிவித்தது. இந்த நிலையில் தீர்ப்பு தொடர்பாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அரசியலமைப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க மாட்டேன்.நீதிமன்றம் மற்றும் லோக்பால் சட்ட விதிகளுக்கு உட்பட்டே முடிவு எடுப்பேன் என்று சபாநாயகர் ரமேஷ்குமார்  தெரிவித்துள்ளார்.

A petition was filed in the Supreme Court against the Speaker on behalf of the Congress and secular Janata Dal (15) MLAs who resigned in Karnataka. In it, it was reported that the speaker was deliberately delaying the resignation letter. The Supreme Court, hearing the case today, has full freedom for the Speaker to decide on the resignation of Karnataka MLAs. The Speaker cannot order the resignation of MLAs. Karnataka Speaker Ramesh Kumar has said that he would not take any decision against the constitution.