இலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!

இலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி!

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் பண்டிகை  ஒட்டி சிறப்பு பிரார்த்தனையின் போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதி என அடுத்தடுத்து 8 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை அடுத்து இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தவறி விட்டது என எதிர்க்கட்சி  ஜனதா விமுக்தி பெரமுனா இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை தொடர்ந்து  இரண்டு நாட்கள்  விவாதங்கள் நடைபெற்றது.

இந்த தீர்மானத்திற்கு முன்னாள் அதிபர் ராஜபக்சே எதிர்க்கட்சிக்கு  ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்த தீர்மானத்தை ஆதரித்தும் , எதிர்த்தும் நேற்று முன்தினம்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதில் மொத்தம் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரசுக்கு ஆதரவாக 119 எம்.பிக்கள் வாக்குகளை அளித்தனர். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
author avatar
murugan
Join our channel google news Youtube