இதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது - காவல் இணை ஆணையர் சுதாகர் பேட்டி

இதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது என்று சென்னை

By venu | Published: Oct 13, 2019 05:06 PM

இதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது என்று சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில்  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு நடைபெற்றது.இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நேற்றுடன் நிறைவடைந்தது.இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்து சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஒரு மாத காலமாக பயிற்சி மேற்கொண்டோம் . இதுவரை எந்த அதிபரும் இவ்வளவு தூரம் சாலையில் சென்றது கிடையாது.சீனஅதிபரின் வருகையையொட்டி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களையும் கண்காணித்தோம். சாலைகளில் மின் கம்பம், குப்பை தொட்டி உள்ளிட்ட அனைத்திலும் சோதனை நடத்தப்பட்டது .110-க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் ஒரு மாத காலமாக 35 கிலோ மீட்டர் வரை சோதனை மேற்கொண்டனர்.  35 கிலோ மீட்டருக்கு ஒவ்வொரு வீடுகளிளும் சோதனை நடத்தப்பட்டது.பொதுமக்கள் எங்களுக்கு மிகுந்த ஆதரவளித்தனர்.அதிபர் செல்லும் அனைத்து இடங்களிலும் ட்ரோன் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டது என்று இணை ஆணையர் சுதாகர் தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc