பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு இல்லை – மத்திய கல்வி அமைச்சகம்.

பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு இல்லை – மத்திய கல்வி அமைச்சகம்.

டிசம்பர் 2020 வரை பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு  குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.எனவே பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.எனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்து வருகிறது.

இதனிடையே  இன்று டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இந்த கூட்டத்தில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே கூறுகையில், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை காரணமாக டிசம்பர் 2020 வரை பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு  குறைவு என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube