பயோமெட்ரிக் வருகையைப் பதிவு இல்லையா ..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க ஆணை

  • பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • வருகின்ற  28 ஆம் தேதிக்குள் விளக்கம் தர பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.அதன்படி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என அனைவரும் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும்.இந்த பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவு நேரம், தகவல் உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.அதில்,  பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் வருகின்ற 28-ம் தேதிக்குள் வருகையை பதிவு செய்யாததற்கான காரணத்தை  விளக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பயோ மெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யாத பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.