தல அஜித் படங்களுக்கு இனி ‘நோ’ பேனர்! ரசிகர்கள் திட்டவட்டம்!

சென்னையில் அதிமுக பிரமுகர் சாலையோரம் வைத்திருந்த பேனர் சரிந்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னாடி வந்த தண்ணீர் லாரி மோதியது. இச்சாபவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பேனர் வைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், சுபஸ்ரீ மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு இருந்தது, மேலும், இனி வரும் அஜித் படங்களில் அவர் புகழை பரப்பும் நோக்கிலும், வேறு சுப நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்க மாட்டோம். என உறுதிமொழி எடுத்து, அதனை போஸ்டராக அடித்து மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.