செயற்கை பானம் வேண்டாம், இயற்கை பானம் என்றால் அது இளநீர் தான்

Don't drink artificial drink, it's natural water

  • இயற்கை பானம் என்றால் அது இளநீர் தான்.
கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், மக்கள் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்பி குடிப்பதுண்டு. ஆனால், இந்த செயற்கையான பானங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில்லை. இது பல உடல்நலக் கேடுகளை தான் நமக்கு அளிக்கிறது. Related image இயற்கையான பானம் என்று சொல்லப்போனால், அது இளநீர் மட்டும் தான். ஏனென்றால், அது மட்டும் தான், இயற்கையாகவே பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு பானம் ஆகும். இளநீரில் வைட்டமின்கள்,கால்சியம்,மினரல்கள்,அமினோ ஆசிட், பொட்டாசியம், எலக்ட்ரோல் போன்ற சத்துக்கள் உள்ளது. இது குறைவான கலோரிகளையே கொண்டுள்ளது. இதில் அதிகமான கொழுப்புகள் இல்லை.

வயிற்று போக்கு

Image result for வயிற்று போக்கு வயிற்றுப்போக்கு பிரச்னை உள்ளவர்களுக்கு உடலில் அதிகமான நீரிழப்பு ஏற்படும். அந்த நீரிழப்பை கட்டுப்படுத்துவதற்கு இளநீர் ஒரு சிறந்த மருந்தாகும். வயிறுபோக்கு ஏற்பட்டு உடல் இளைத்து காணப்படுபவர்களுக்கு இது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல்

Image result for காய்ச்சல் காய்ச்சல் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இளநீர் குளிர்ச்சியான தன்மையை உடையது என்பதால், காய்ச்சல் நேரங்களில் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

தேங்காய் பால்

Related image தேங்காய் பால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இப்பாலில் லாரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இந்த பாலில் உள்ள அமிலத்தன்மை நமது உடலில் உள்ள கெட்டப் கொழுப்பை கரைத்து, உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

Image result for நோய் எதிர்ப்பு சக்தி தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து வந்தால், இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது. மேலும் இது உடல் எடை அதிகரிப்பையும் தடுக்கிறது. இது தலைமுடி மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.