தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை இரண்டு நாள் பிரமாண்ட வசூல்! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா?!

தல அஜித்தின் நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி உள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்களை எதிர்த்து கருத்து கூறும் வகையில் படத்தில் வலிமையான வசனங்கள் இடம்பெற்றன. இதனால் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டுமே 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருந்தது. இப்படம் இரண்டு நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி வசூல் செய்துள்ளதாக தற்போது  தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.