தனி கொடியுடன் புதிய நாட்டையே உருவாக்கிய நித்தியானந்தா..?!

தனி கொடியுடன் புதிய நாட்டையே உருவாக்கிய நித்தியானந்தா..?!

நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியில் பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தின் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது. நித்தியானந்தா ஆபாச வீடியோ, சீடர்கள் பலாத்காரம், பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற பல சர்சையில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். சமீபத்தில் குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் பெண் குழந்தைகளை அடைத்து வைத்து  வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.அந்த புகாரை கொடுத்தவர் நித்தியானந்தாவின் செயலாளர்களின் ஒருவராக இருந்த ஜனார்தன் ஷர்மா. இவர் கொடுத்த புகாரின் பேரில் குஜராத் அரசு அந்த ஆசிரமத்தை மூடியுள்ளது. இந்நிலையில் நித்யானந்தா "கைலாஷ்" என்ற பெயரில் ஒரு தனிநாடு உருவாக்க போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதற்காக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி உள்ளார் நித்யானந்தா. இதற்காக "கைலாசா"என்ற இணையதளத்தை  உருவாக்கி ஹிந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் இந்த நாட்டில்  குடிமகன் ஆகலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது 10 கோடி பேர் இருப்பதாக நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டுக்கு பாஸ்போர்ட், மொழி ஆகியவை இருக்கிறது.பாஸ்போர்ட் இரு நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ,இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்ட ரீதியாக அறிவிக்கும் பணிகளை அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!