மூவலர் லிங்கத்தை எடுப்பதற்கு நான் நாத்திகன் அல்ல ! – நித்தியானந்தா விளக்கம்.

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பன்னவாடி கிராமத்தில், சோழ மன்னர் காலத்தில் ஜலகண்டேசுவரர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்ட மிக பழமையானதாகும். இந்த கோயிலில் பூஜை செய்வதற்காக 14 நாயன்மார்கள் பணி அமர்த்தப்பட்டிருந்ததாக குறிப்புகள் உள்ளன.

பெங்களூரில் சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, மேட்டூர் ஜலகண்டேசுவர் கோயிலை தாம் முந்தைய ஜென்மத்தில் கட்டியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில், ஜலகண்டேசுவர் கோயிலின் மூலவர் லிங்கம் தன்னிடம் தான் உள்ளதாக அவர் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் பன்னவாடி மக்கள் நித்தியானந்தாவிடம் இருக்கும் லிங்கத்தை பெற்றுத்தருமாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பூஜை செய்த மூவலர் லிங்கத்தைக் அசைப்பதற்கு தான் நாத்திகனா என்று கூறி விளக்கமளித்துள்ளார்

author avatar
Vidhusan