குஜராத்தில் நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது..!

நித்யானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டு தருமாறு குஜராத் உயர்நீதி

By murugan | Published: Dec 02, 2019 12:36 PM

நித்யானந்தாவின் ஆசிரமத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டு தருமாறு குஜராத் உயர்நீதி மன்றத்தில் ஜனார்த்தன சர்மா என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மேலும் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு புகாரும் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் குஜராத்தில் இயங்கி வந்த நித்தியானந்தா ஆசிரமம் தனியார் பள்ளியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஹீராபூரில் இயங்கி வந்த நித்யானந்தாஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. நித்யானந்தாஆசிரமத்தின் மீதான தொடர் புகார் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்ததாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc