பயணிப்பதற்கான அனைத்து வழிகளும் தயார்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • அடுத்த வருடத்தில் சில மாதங்களில் உட்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யப்படும் முதலீடு ரூ.300 லட்சம் கோடியாக உயரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
  • மேலும்  2020 ஆம் ஆண்டின் இடையே உலக அளவிலான முதலீட்டாளர் மாநாட்டை கூட்ட உள்ளது என்றும்  தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  உட்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஏதுவாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழு 70 விதமான துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சுமார் ரூ.102 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது .அடுத்த வருடத்தில் சில மாதங்களில் உட்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யப்படும் முதலீடு ரூ.300 லட்சம் கோடியாக உயரும்.

ரூ.102 லட்சம் கோடி மதிப்பிலான இந்த தேசிய உட்கட்டமைப்பு திட்டம் இந்தியாவை 2025-ல் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்க உதவி புரியும் .அனைத்து சவால்களும் கண்டறியப்பட்டுவிட்டது, பயணிப்பதற்கான அனைத்து வழிகளும் தயாராக உள்ளது. 2020 ஆம் ஆண்டின் இடையே உலக அளவிலான முதலீட்டாளர் மாநாட்டை கூட்ட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.