வங்கிகள் இணைப்பு பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உதவும்-நிர்மலா சீதாராமன்

வங்கிகள் இணைப்பு பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உதவும் என்று மத்திய நிதியமைச்சர்

By Fahad | Published: Apr 01 2020 02:01 AM

வங்கிகள் இணைப்பு பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உதவும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வங்கிகளை இணைப்பதன் மூலம், கடன் நிறைய வழங்க வேண்டும் என்கிற நோக்கில் செயலப்படுத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி பொருளாதார வளர்ச்சியும் இதனால் மேம்படும். இதுகுறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது குறிப்பிட்டு இருந்தேன். வங்கிகள் இணைப்பது குறித்து, வங்கிகளே அமைப்புகளுடன் கலந்தாலோசித்து அமல் படுத்த வேண்டும். பல வங்கிகள் கடன் கொடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனை சரி செய்யும் வகையில் தான் இந்த வங்கிகள் இணைப்பு என்பது செயலப்படுத்தப்பட உள்ளது.மேலும் பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும் இது உதவும் என்று தெரிவித்துள்ளார்.

More News From NIRMALA SITHARAMAN