மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பட்ஜெட்...நிர்மலா சீத்தாராமன் பேட்டி...!!

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய பட்ஜெட் என்று மத்திய பாதுகாப்புத்துறை

By Fahad | Published: Apr 03 2020 04:49 PM

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய பட்ஜெட் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி_யில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் , மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றக் கூடிய பட்ஜெட்டை, மத்திய அரசு தாக்கல் செய்துள்ளதால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில், குற்றம்சாட்டி வருவதாக  தெரிவித்தார்.மேலும் அவர் பேசுகையில் ,ரபேல் போர் விமான விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.