#BREAKING : நிர்பயா கொலை குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு

#BREAKING : நிர்பயா கொலை குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவரது மனுவில்,சம்பவம் நடைபெற்ற பொழுது தான் ஒரு சிறார்.எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங்,   வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பவன் குப்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அவரது மனுவில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பவம் நடந்த போது தான் சிறுவன் என்றும் எனவே சிறார் சட்டத்தின் பலனை தனக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது.அப்பொழுது,பவன் குப்தா மனுவை தள்ளுபடி செய்வதாக டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது.மேலும்  பவன் குப்தா வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம்.இதற்கு இடையில் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பவன் குப்தா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.ஆனால் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் குற்றவாளி பவன் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில்,சம்பவம் நடைபெற்ற பொழுது தான் ஒரு சிறார். எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!
சட்டம் ஒழுங்கு கோமாவில் உள்ளது - அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின்!
தங்கம் விலை சவரனுக்கு 280 குறைவு..!
தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷைப் பாராட்டிய பிரதமர் மோடி..!
உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு - நாளை விசாரணை
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கு பதில் இவரை நியமிக்கலாம்....சுனில் கவாஸ்கர்...!