பந்தை சேதப்படுத்தியதால் நிக்கோலஸ் பூரனுக்கு விளையாட தடை ..!

கடந்த திங்கள்கிழமை லக்னோவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில்

By murugan | Published: Nov 14, 2019 07:53 AM

கடந்த திங்கள்கிழமை லக்னோவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் பந்தின் மேற்பரப்பை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.அதை பூரன் ஒப்புக் கொண்டார். ஐசிசி நடத்தை விதிகளின் 3 ஆம் நிலையை மீறியுள்ளார். இந்நிலையில் பூரன் அடுத்த நான்கு டி 20 ஐ போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது சாதனையில் இருந்து ஐந்து புள்ளிகள் குறைக்கப்பட்டு உள்ளது. தடைக்கு பின்னர் பேசிய பூரன்,  ரசிகர்கள், அணி வீரர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களிடம் மன்னிப்புக்கேட்டு உள்ளார்.எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களை மீண்டும் செய்யமாட்டேன் என அவர் உறுதியளித்தார். இதனால் நிக்கோலஸ் பூரன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று டி 20 ஐ போட்டிகளிலும் , டிசம்பரில் நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான முதல் டி 20 ஐ போட்டிவரை விளையாட முடியாது.
Step2: Place in ads Display sections

unicc