கால்பந்தாட்ட ரசிகரின் முகத்தில் குத்துவிட்ட கால்பந்தாட்ட வீரர்..!3 போட்டிகளில் விளையாட தடை..!

Soccer fan

கால்பந்தாட்ட ரசிகரின் முகத்தில் குத்துவிட்ட கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டியை கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவரை பிஎஸ்ஜி அணியின் முன்னணி வீரரான நெய்மர் முகத்தில் குத்தியுள்ளார். பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் மற்றும் ரென்னெஸ் அணிகள் மோதியது.இதில் இரு அணிகளும்  தலா இரண்டு கோல் அடித்து சமநிலையில் இருந்த நிலையில் பெனால்டி சூட்அவுட் முறையின் மூலமாக ரென்னெஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் காயத்தால் போட்டியின் வெளியே இருந்த பிஎஸ்ஜி அணியின் முன்னணி வீரரான நெய்மர்   கேலரியில் இருந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது  தனது அணி தோல்வியடைந்தது.அந்த  விரக்தியில் நெய்மர் சென்று கொண்டிருந்த போது   ரென்னெஸ் அணியின் ரசிகர் ஒருவர் விரக்தியாக இருந்த நெய்மரை படம்  பிடித்ததாக தெரிகிறது. https://youtu.be/I_QE_ftpFMc இதில் கோபம் அடைந்த நெய்மர் ரசிகரின் முகத்தில் ஒரு குத்து விட்டார்.இது வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து விசாரணையின் முடிவில்  அவருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

Related News