அடுத்தடுத்து ரசிகர்களை குஷிபடுத்த வெளியாகபோகும் மாஸ் ஹீரோஸ் படங்கள்!! ரிலீஸ் டேட் அப்டேட்!!

பொங்கல் திருநாளை  முன்னிட்டு அஜித்தின் விஸ்வாசம் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட என இரு பெரும் நடிகர்களின் படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து விஜய், அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற பெரிய ஹீரோ படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசையாக மே மாதத்தில் இருந்து வெளியாக காத்திருக்கின்றன. அதில் முதலில் வரவிறுப்பது சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும்’என்.ஜி.கே’ திரைமப்படம் மே 31இலும், அடுத்து பள்ளிகள் திறந்து விடும் என்பதால் ஜூன், ஜூலையில் எந்த பெரிய படங்களும் வெளிவருவதாக தெரியவில்லை. ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி (சனி கிழமை) அஜித் நடிப்பில் தீரன் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நேர் கொண்ட பார்வை’ படமும், அடுத்ததாக ஆகஸ்ட் 30ஆம் தேதி சூர்யா – கே.வி.ஆனந்த கூட்டணியில் உருவாகி வரும் காப்பான் படம் (இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை)  வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக தீபாவளிக்கு விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 63 படம்.வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதனை அடுத்து 2020 பொங்கல் திருநாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment