அடுத்த படம் தளபதியுடன் தான் பிரபல இயக்குநரின் ஓபன் டாக் !!!

விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில் நான்காவதாக அஜித்தை வைத்து ‘ விஸ்வாசம் ‘ படத்தை இயக்கினார். அந்த படம்  தற்போது திரைக்கு வர உள்ளது.

இப்படத்தின் இயக்குனர் சிவா இந்த படம் குறித்து பல நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். மேலும் பல பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் விஜய் குறித்து சிவா பேசினார்.அப்போது அவர் பேசுகையில் , தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க நான் மிகவும் ஆசைபடுகிறேன். மேலும் அவருக்காக ஒரு கதையை எழுதி வைத்துள்ளேன் மற்றும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.அவர் அன்பாக பேச கூடியவர். மிக விரைவில் அவருடன் படம் பண்ணுவேன்  என்று கூறியுள்ளார்.

 

Leave a Comment