நாடாளுமன்றத்தில் குழந்தை மற்றும் பால் பாட்டிலுடன் நியூசிலாந்து சபாநாயகர்! குவியும் பாராட்டுக்கள்!

ட்ரவோர்ட் மல்லார்ட் அவர்கள் நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆவார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு, நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு குழந்தைகளை கொண்டுவர அனுமதியளித்தார். மேலும், அவர்களை பராமரிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்.

இதனையடுத்து, நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், பெட்ரோல், டீசல் விலை குறித்த விவாதம் நடந்துக்க கொண்டிருந்தபோது, எம்.பி ஒருவர் தனது குழந்தையை வைத்துள்ளார். அவர் இந்த விவாதத்தில் அந்த எம்.பி பங்கேற்க முயன்றார்.

அப்போது சாபாநாயகர் அவரின் குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு சொன்னார். இதனையடுத்து, அந்த குழந்தையை தன்னுடன் வைத்துக்கொண்டு, அக்குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்துள்ளார். சபாநாயகரின் இந்த செயல் பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், சபாநாயகர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “பொதுவாக சபாநாயகர் நாற்காலியில் சபாநாயகர் மட்டுமே அமருவார். ஆனால் இன்று ஒரு சிறப்பு விருந்தினர் என்னுடன் வந்து அமர்ந்திருந்தார் என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.