சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து கேப்டன் கர்ப்பம் !

நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் அமெ சட்டர்த்வெய்ட் கடந்த 12 வருடங்களாக

By murugan | Published: Aug 22, 2019 08:45 AM

நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் அமெ சட்டர்த்வெய்ட் கடந்த 12 வருடங்களாக நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். 32 வயதான அமெ சட்டர்த்வெய்ட் இதுவரை 119 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6 சதம் , 21 அரைசதம் உட்பட 3,821 ரன்கள் குவித்து உள்ளார். டி 20-யில் 99 போட்டியில் 1526 ரன்கள் எடுத்தார். பெண்கள் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 4 சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். சட்டர்த்வெய்ட் தன்பாலின ஈர்ப்பு கொண்ட  அணியின் சக வீராங்கனையும், வேகப்பந்து வீச்சாளரான 28 வயதான லியா தாஹூஹூ உடன் நெருக்கமாக பழகினார். பின்னர் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இதை  தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சட்டர்த்வெய்ட் தான்  கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கிறார். இதனால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா நடக்கும் பெண்கள்  20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட மாட்டார்.2021-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடக்கும் 50 வது உலக கோப்பை போட்டிக்கு முன்பாக களம் திரும்ப திட்டமிட்டு உள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc