நில நடுக்கத்துக்கு மத்தியிலும் பேட்டியளித்த நியூசிலாந்து பிரதமர்!

பேட்டியின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் பொருட்படுத்தாமல் பேட்டியளித்த நியூசிலாந்து பிரதமர். 

உலகம் முழுவதும் கொரோனாவின்துக்கம் தாக்கம் நாளுக்கு நாள் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாடுகளில் லட்சத்தை கடந்து பாதிப்புகள் சென்று கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், நியூசிலாந்தில் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அறிவாகவும், துணிவாகவும் விரைந்து செயல்பட்ட நியூசிலாந்து பிரதமராகிய பெண்மணி ஜெசிந்தாவால் அந்நாட்டில் கொரோனா தற்பொழுது கட்டுக்குள் உள்ளது. இதனால் அவருக்கு புகழும் கிடைத்துள்ளது. 

இதனை தொடர்ந்து பாமாயில் கொரோனா குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் பிரதமர் ஜெசிந்தா. அப்பொழுது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு மாளிகை அதிர்ந்த்துள்ளது. இருந்த போதிலும், பேட்டியளிப்பதை நிறுத்தாமல் அவர் கூலாக மீண்டும் பேட்டியை தொடர்ந்துள்ளார். இதனால் அருகிலிருந்தவர்கள் அவரை தைரியமான பெண்மணி என புகழ்ந்துள்ளனர். மேலும், அங்கு 5.6 ரிக்டர் அளவாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பாதிப்புகள் அதிகம் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

author avatar
Rebekal