மார்ட்டின் கப்திலின் ஓவர் த்ரோவால் உலகக்கோப்பையை இழந்த நியூஸிலாந்து !

நெற்றியை  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை  பறிகொடுத்து  241 ரன்கள் அடுத்தது.

பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தது.அதனால் போட்டி  டையில் முடிந்தது.

பின்னர் சூப்பர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவர் போட்டியும்  டை ஆனது. அதனால் அதிக பவுண்டரி அடித்த அணிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது   என அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் கடைசி ஓவரை மிக சிறப்பாக ட்ரெண்ட் போல்ட் வீசி வந்தார்.கடைசி ஓவரில் நான்காவது பந்தை ட்ரெண்ட் போல்ட் வீசினார்.அந்த பந்தை அடித்து  பென் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் ஓடினார்.அப்போது  மார்ட்டின் கப்தில் ஸ்டெம்பிட் செய்வதற்காக  பந்தை  ஸ்டெம்பை நோக்கி வீசினார்.

ஆனால் பந்து ஸ்டெம்பில் படாமல் பவுண்டரியை தொட்டது.அதனால் அந்த பந்தில் 6 ரன்கள் சென்றதால் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி போட்டியை டை செய்வதற்கு பெரிதும் உதவியது.

author avatar
murugan