திருமணம் செய்ய இந்தியா வந்த நியூஸிலாந்து பெண்..! டெல்லி ஹோட்டலில் மரணம்..!

இந்திய முறைபடி திருமணம் செய்ய இந்தியா வந்த நியூசிலாந்தைச் சேர்ந்த 49 வயது பெண்

By murugan | Published: Nov 17, 2019 08:27 AM

இந்திய முறைபடி திருமணம் செய்ய இந்தியா வந்த நியூசிலாந்தைச் சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் நேற்று  காலை டெல்லியில் உள்ள பஹர்கஞ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இறந்து கிடந்தார் என போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் துயாலி பாலி அன்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் பிளட் பிரஷர் நோயாளியாக இருந்ததாகவும், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த தனது காதலனுடன் இந்தியா வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று காலை துயாலி பாலி மயக்க நிலையில் இருப்பதை பார்த்த காதலன் ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார் .பின்னர் அந்த பெண்ணை லேடி ஹார்டிங்கே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவர் இறந்துவிட்டதாக  மருத்துவர்கள் கூறினர். அந்த பெண் பிளட் பிரஷர் நோயாளியாக இருந்ததால், அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாகத் தெரிகிறது. மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்  இறப்புக்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியும் என கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc