தளபதி ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்து ரெடி ! இன்று வெளியாகிறது ஃபர்ஸ்ட் லுக்

  • தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64வது திரைப்படம் உருவாகிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். 
  • இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று  வெளியாக உள்ளது. 

தளபதி  விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.படத்தை  ‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சாந்தனு, மாளவிகா மோஹனன்,ஆண்ட்ரியா, ‘கைதி’ அர்ஜுன் தாஸ், விஜே ரம்யா என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி, சென்னை, கர்நாடக என பல இடங்களில் ஷூட்டிங்  நடைபெற்று வருகிறது.

இப்படத்திலிருந்து ஒரு முக்கிய அப்டேட் வரும் என படக்குழு சார்பில் தகவல் வெளியானது. அதற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இப்படத்தின் தலைப்புடன் கூடிய முதல் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என தற்போது அதிகாரபூர்வமாக தகவல் வெளியாக உள்ளது.