சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல கட்டுப்பாடு போட்ட காவல்துறை .!

  • புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதமும்  நடக்கலாம் இருக்க காவல்துறை பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • அதில் நுழைவு வாயில்கள் , நிகழ்ச்சி , விருந்து நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் டிசம்பா் 31-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1 மணி வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதமும்  நடக்கலாம் இருக்க காவல்துறை பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், ஆகிய இடங்களுக்கு வரும் வாகனங்களை முறையாக சோதனை செய்யவேண்டும் . நுழைவு வாயில்கள் , நிகழ்ச்சி , விருந்து நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட  அரங்கத்திலேயே  நடத்த வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிக்காக  நீச்சல் குளத்தின் அருகில் மேடை அமைக்கக் கூடாது.

நீச்சல் குளத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும் . வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது போன்ற  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த அனைத்து விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

 

author avatar
murugan