புற்றுநோயை குணப்படுத்தும் புதிய அதிநவீன கருவி.! அரசு மருத்துவமனையில் அறிமுகம்.!

சென்னையில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை வளாகம்,

By balakaliyamoorthy | Published: Jan 28, 2020 09:11 PM

  • சென்னையில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை வளாகம், புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் லீனியர் ஆக்சிலேட்டர் என்ற கருவி மற்றும் சி.டி. சிமுலேட்டர் கருவி ஆகியவை முதல் பழனிச்சாமி தொங்கி வைத்தார்.
  • பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில், ரூ.6 கோடி மதிப்பிலான புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை வளாகம், ரூ.22 கோடி மதிப்பிலான புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் லீனியர் ஆக்சிலேட்டர் என்ற கருவி மற்றும் சி.டி. சிமுலேட்டர் கருவி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் சேர்ந்து அமைச்சர்களும் இதனை தொடங்கி வைத்தனர். பின்னர் இதனைத்தொடர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனையிலும், புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் கருவி ரூ.20 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ளது. அதனை காணொலி மூலம், பொதுமக்களுக்காக முதலமைச்சர் தொடங்கிவைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்த கருவிகளை பற்றி மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு அதனை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உடலில் எந்த இடத்தில் புற்றுநோய் இருந்தாலும், அறுவை சிகிச்சை செய்யாமல், கதிர்வீச்சு மூலமே குணப்படுத்த முடியும் என்றார். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த மருத்துவச் சிகிச்சை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு இலவசமாகவே கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், புற்றுநோய்க்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் இந்த நவீன கருவிகள், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, தஞ்சை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். புற்றுநோய் எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதை கண்டறியும் பெட் ஸ்கேன் கருவியும் விரைவில் 7 இடங்களில் பொருத்தப்பட இருப்பதாக கூறிய அவர், ஆரம்ப நிலையில் உள்ள அனைத்து விதமான புற்றுநோய்களையும் முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
Step2: Place in ads Display sections

unicc