வந்தது பெண்களுக்கான புதிய பாதுகாப்பு சட்டம்.! பஞ்சாப் அரசு அதிரடி..!

  • சில தினங்களுக்கு முன்னர் ஹைராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
  • அங்கு நடைபெற்ற நிலையில் பஞ்சாபில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது .

பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் கால்நடை பெண் மருத்துவர் ஒருவரை இரவு நேரத்தில் ஒரு தனிப்பட்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் ஐதராபாத் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது . இதனால் பெண்கள் பாதுகாப்பிற்கான ஒரு புதிய திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இரவு 9 மணிமுதல் காலை 6 மணிவரை பெண்களுக்கான இலவச வாகன வசதி அளிக்கப்படும் என்றும், இரவு நேரத்தில் பாதுகாப்பாக வீடு திரும்ப வாகனம் எதுவும் கிடைக்காத பட்சத்தில் இந்த சேவையை பெண்கள் பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர உதவி எண்கள் 100, 112, 181 ஆகியவற்றில் தொடர்புகொண்டு போலீசாரிடம் பாதுகாப்பான பயண வசதியை பெண்கள் கேட்கலாம் என்றும், பெண் போலீஸ் ஒருவருடன் வாகனத்தில் பெண்கள் அவரவர் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்படுவார்கள் என கூறினார் பஞ்சாப் முதல் மந்திரி அம்ரீந்தர் சிங். இந்த புதிய திட்டம் மக்களால் வரவேற்கப்படுகிறது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்