ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவி உட்பட 21 தேர்வுகளுக்கான புதிய தேதி வெளியீடு.!

யு.பி.எஸ்.சி. நடத்த இருந்த 21 பதவி தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது.

By balakaliyamoorthy | Published: Jun 06, 2020 05:00 PM

யு.பி.எஸ்.சி. நடத்த இருந்த 21 பதவி தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. அதில், ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கு அக்டோபர் 4ல் முதல்நிலை தேர்வு.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் பதவிக்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்தாண்டு சிவில் சர்வீஸ் பணியில் 796 பேரும், ஐஎப்எஸ் பணியில் 90 பேரும் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 12ம் தேதி அறிவித்தது. இந்த தேர்வுக்கு சுமார் 12 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், யு.பி.எஸ்.சி. 21 பதவி தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸ், ஐஎப்எஸ் முதல் நிலை தேர்வுகள் அக்டோபர் 4ம் தேதியும், சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதியும் நடக்கிறது. ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு வருகிற பிப்ரவரி 28ம் தேதியும், இன்ஜினியர் சர்வீஸ் தேர்வு வருகிற ஜனவரி 5ம் தேதியும் நடைபெறுகிறது. மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியும் நடக்கிறது.

ஜிேயா சயின்டிஸ்ட் முதல் நிலை தேர்வு ஜனவரி 19ம் தேதியும், மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதியும் நடைபெறுகிறது. சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்றும் அதில் தேர்ச்சி பெற்றால் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc